திருச்செந்தூர் கோயிலில்  இந்திக் கல்வெட்டை  உடனடியாக அகற்றுங்கள்:வைகோ 

by Editor / 29-04-2021 08:15:56pm
திருச்செந்தூர் கோயிலில்  இந்திக் கல்வெட்டை  உடனடியாக அகற்றுங்கள்:வைகோ 

 


திருச்செந்தூர் கோயிலில் இந்திக் கல்வெட்டை  உடனடியாக அகற்றுங்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்ட அறிக்கை:

"அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்திக் கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று செய்தித்தாள்களில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயிருக்கின்றார்கள்.கொதிநிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோடி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்.இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்காக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம் தரக் கூடாது.
திருச்செந்தூருக்கும், வட ஆரியத்திற்கும் எந்தக் காலத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்காலத்தில் வரலாறைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்று கூறி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo