கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி குற்றாலத்தில் சாலை மறியல் போராட்டம்.

by Editor / 15-05-2023 09:37:47pm
கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி  குற்றாலத்தில் சாலை மறியல் போராட்டம்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றாலத்தில் சாலை மறியல் போராட்டம்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு அமைப்புகள் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து வலியுறுத்த கோரி, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள்  குற்றாலம் பகுதியில் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

 கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்திக்கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தென்காசி மாவட்டத்தின் இயற்கை வளங்களை சுரண்டி கேரளாவிற்கு கொண்டு செல்லும் தமிழக அரசை கண்டித்தும் தற்போது பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் தற்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், குற்றாலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

 

 

Tags :

Share via

More stories

Logo