யானைகளை  கொன்று தந்தங்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

by Editor / 17-09-2023 10:10:37pm
 யானைகளை  கொன்று தந்தங்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுவது தென்காசி மாவட்டம் மேக்கரை -கேரள  அச்சன்கோவில் வனப்பகுதி ஆகும். இந்த வனப் பகுதிகள் பம்பை வரை நீண்டு காணப்படும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் நீர் தேடி அடிக்கடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி மாவட்டம் மேக்கரை, வடகரை, கடையநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தோட்டங்களில் வந்து இறங்கி சேதப்படுத்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது, யானைகள் கூட்டம் நிறைந்த வனப்பகுதியான அச்சன்கோவில் கல்லாறு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அச்சன்கோவில் பகுதியைச் சார்ந்த சிலர் கல் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது சாக்கில் கட்டப்பட்ட நிலையில் யானை தந்தம் உள்ளிட்டவைகள் இருப்பது கண்டு உடனடியாக அவர்கள் அதனை அச்சன்கோவில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அச்சன்கோவில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் யானைகளைக் கொன்று தந்தம் திருடும் கும்பல் யானையை கொன்று தந்தத்தை திருடி கடத்துவதற்கு தயாராக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து விசாரணையை முடக்கிய வனத்துறையினர் அச்சன்கோவில் பகுதியைச் சார்ந்த பிரசாத், ஸ்ரீஜித், சரத், அனீஸ்,குஞ்சு மோன்,ஆகிய ஐந்து நபர்களை கைது செய்தனர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் நான்கு யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி விற்பனை செய்ததாக்க அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் இந்தச் சம்பவம் கேரள மாநிலப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :  யானைகளை  கொன்று தந்தங்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share via