யூ  ட்யூப் மூலம் பிரபலமான டி .டி. எப் வாசன் பைக் விபத்தில் படுகாயம்

by Admin / 18-09-2023 12:40:22am
 யூ  ட்யூப் மூலம் பிரபலமான டி .டி. எப் வாசன் பைக்  விபத்தில் படுகாயம்

 பைக் சாகசம்  யூ  ட்யூப் மூலம் பிரபலம் அடைந்த டி .டி. எப் வாசன் இன்று காஞ்சிபுரம் அருகே பைக்கில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த டி. டி. எஃப் வாசன் காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் அருகே வேகமாக வந்து வீலிங் செய்த பொழுது பக்கவாட்டு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். அவர் தூக்கி வீசப்படும் சிசிடி  காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த வாசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.. .இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது..

 

 யூ  ட்யூப் மூலம் பிரபலமான டி .டி. எப் வாசன் பைக்  விபத்தில் படுகாயம்
 

Tags :

Share via