செங்கோட்டையில் வீர விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வம்பளந்தான் முக்கு அருகில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் கூடத்தில் இருந்து, வீர விநாயகர் சிலை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு ,செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம் சந்திப்பு, முத்தழகி அம்மன் கோவில் தெரு, மேலூர் பள்ளிவாசல் பகுதி பம்பு ஹவுஸ் ரோடு , ஓம் காளி திடலான வண்டி மலர்ச்சியம்மன் கோவில் முன்பு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட வீரவிநாயகர் சிலை வைக்கப்பட்டது. தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டன, மேளதாளங்கள் முழங்க வீர விநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடந்து முடிந்தன.இதன் தொடர்ச்சியாக நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 19ஆம் தேதி காலை செங்கோட்டை நகரின் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஓம் காளி திடலில் இருந்து மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாற்றில் கரைக்கப்படும்.
Tags : செங்கோட்டையில் வீர விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.