நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் புத்தராஜா பகுதியில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்து திடீரென துப்பாக்கியுடன் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து நிறுவனத்தில் இருந்த 30 கிலோ தங்கம், ரூ.4 லட்சம் ரொக்கப்பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து தப்பிச்சென்றது.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நகைக்கடன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags : நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை