சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது பாப்புலர் ப்ரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது-பசவராஜ் பொம்மை

by Editor / 01-10-2022 09:31:16am
சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது பாப்புலர் ப்ரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது-பசவராஜ் பொம்மை

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசியுள்ளதற்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள முதல்வர், பாப்புலர் ப்ரண்ட் மீதான தடையை அவர் கேள்விக்குட்படுத்துகிறார். சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது பாப்புலர் ப்ரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?.
ஆர்.எஸ்.எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு. ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் தேசபக்தி பற்றிய புரிதலை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo