அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் கர்நாடக அரசு

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் நாராயணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் படித்தும் மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மாணவ மாணவிகளுக்கு தெரியபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :