நாளை முழு ஊரடங்கு எது இயங்கும் எது இயங்காது..?
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பேருந்து ஆட்டோ மெட்ரோ ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் 9ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 10ஆம் தேதி காலை 5 மணிவரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரெயில்களும் இரவு நேரங்களில் புறப்பட கூடிய ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகரப் பேருந்துகள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை செய்யப் படுவதாகவும் மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் சாலையில் செல்ல அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் மின்சார ரயில்கள் 50% இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :