நகரப் பஸ்களில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு
தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, சாதாரண கட்டண நகரப் பஸ்களில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் மகளிரிடம் இந்த திட்டம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்த நிலையில், 07.05.2021 முதல் 05.10.22 வரை மகளிர் இலவச பஸ்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் 176 கோடியே 84 லட்சம் பேரும், திருநங்கைகள் 10.01 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 129.10 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் அவர் தம் உடன்துணையர் 6.55 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். 102 கோடியே 83 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். இதுவரை நகரம் முழுவதும் 281 கோடியே 14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் மகளிர் பயணம் செய்வதாகவும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags :