31 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை- தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கினாா்.

by Admin / 10-07-2026 07:28:02pm
 31 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை- தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கினாா்.

இன்று தமிழக முதலமைச்சர் விஜய் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 31 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளையும் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாயையும் வழங்கினார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்காலிக பணிநியமன ஆணைகளை வழங்கலாம் என்றும் நீதிமன்ற வரம்பிற்கு அது உட்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து பணி  நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via
Logo