காணொளிக்காட்சிகள் மூலமாக திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (06.10.2025) திங்கட்கிழமை காலை அளவில் காணொளிக்காட்சி மூலமாக பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார்.
(1) பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 44 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 6 கோடியே 58 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 772 புதிய வீடுகளை திறந்து வைக்கிறார்கள்.
(2) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானைபாகன் கிராமத்தை திறந்து வைக்கிறார்கள்.
(3) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காட்பாடி அரசு மருத்துவமனை, பழனி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, கூடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, சங்கராபுரம் அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 108 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மருந்து கிடங்குகள், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் 1.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வகக் கட்டடம், சென்னையில் 14.85 கோடி ரூபாய் செலவில் புதிய மருந்து கட்டுப்பாடு நிர்வாக இயக்கக கட்டடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 இலட்சம் ரூபாய் செலவில் உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டடம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தில் சார்பில் 6 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் 20 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
மேலும், தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வு கூடங்களில் 24 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன உபகரணங்களை பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கிறார்கள்.
(4) சட்டத்துறை சார்பில் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் 48 கோடியே 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடங்கள் மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் 6 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.
(5) இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.4,000/-லிருந்து ரூ.5,000/-ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,000/-லிருந்து ரூ.2,500/-ஆகவும் உயர்த்தி, தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதன்முறையாக துறை நிலையிலான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைக் தொகை (EX–gratia) வழங்கி, 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதிற்கான காசோலைகளை வழங்குகிறார்கள்.
(6) தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன்எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை வெளியிடுகிறார்.
(7) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 137 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 39 கோடியே 29 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள், 12 கோடியே 72 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 250 வீடுகள், 15 கோடியே 93 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம அறிவுசார் மையங்கள், 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்கள்.
மேலும், பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 62 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள், என மொத்தம் 26 வாகனங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக 5 கோடியே 78 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் 25 அவசரகால ஊர்திகள், 4 கோடி ரூபாய் செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினையும் தொடங்கி வைக்கிறார்கள்
(8) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்கள்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று 2025-ஆம் ஆண்டு அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 மாணவ- மாணவியர் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்கள்.
Tags : காணொளிக்காட்சிகள் மூலமாக திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்.



















