தமிழக வெற்றிக்கழக வழக்கை ஒத்தி வைத்தது.உச்ச நீதிமன்றம்
கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வழக்குகள் தொடுக்கப்பட்டன .சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையின் பொழுது ,விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்கிற கருத்தை நீதிபதி செந்தில்குமார் விமர்சனமாக வைத்திருந்தார்.. இக்கருத்தை நீக்க வேண்டும் என்றும் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. தமிழக அரசு தரப்பும் தமிழக வெற்றிக்கழக தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சொல்லி வழக்கை ஒத்தி வைத்தது.
Tags :



















