குடிமக்களுக்கான விபத்து அவசரச் சிகிச்சை பெறுவது ஒரு அடிப்படை உரிமை- உச்ச நீதிமன்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான விபத்து அவசரச் சிகிச்சை பெறுவது ஒரு அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஒற்றை அவசரகால எண் (112)காவல்துறை (100), தீயணைப்புத்துறை (101), மற்றும் ஆம்புலன்ஸ் (102, 108) போன்ற அனைத்து அவசர எண்களையும் ஒருங்கிணைத்து 112 என்ற ஒரே எண்ணின் கீழ் கொண்டு வர வேண்டும் மாநிலங்கள் பல மொழிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் சிபிஎஸ் வாகன கண்காணிப்பு அமைப்புகள்பொருத்தப்பட்டு, அவை 112 கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்.
அனைத்து ஆம்புலன்ஸ்களும் தேசிய ஆம்புலன்ஸ் குறியீட்டின் தர நிலைகளுக்கு இணங்க வேண்டும். .நற்சிந்தனையாளர் பாதுகாப்பு விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பொதுமக்களைப்பாதுகாக்கவும், அவர்களின் புகார்களைத் தீர்க்கவும் முறையான குறைதீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
காவல்துறை அல்லது மருத்துவமனைகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்
விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள்விபத்தில் சிக்கியவர்களுக்கு பணமில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கும் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் 3 மாதங்களுக்குள் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
தேசிய மற்றும் மாநில அதிர்ச்சிப் பதிவேடு விபத்துத் தரவுகளை முறையாகப் பராமரிக்க 8 வாரங்களுக்குள் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்
அடுத்த 4 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் தங்கள் மருத்துவமனைகளை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பதிவேட்டை உருவாக்க வேண்டும்.
Tags :


















