"பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்- மு.க.ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

by Staff / 22-02-2025 01:59:33pm

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கடலூரில் நடைபெற்ற 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்புடன் அவர்களை வளர்த்து வருகிறோம். இதை தனது பெரும் கடமையாக செயல்பட்டு வருபவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via