நாளை கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு

by Admin / 19-05-2023 07:59:29am
நாளை கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு

 நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியினுடைய முதல்வராக யார் பதவி ஏற்பார் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவை அறிவித்தது..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஆளுனா்  மாளிகையில் , சித்தராமையா ஆளுனரைச் சந்தித்து  உாிமை கோரினாா்....நாளை 12:30 மணியளவில் பெங்களுரூ கண்டிரவா ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறுகிறது

 

Tags :

Share via

More stories