நவீன கேமராக்கள் மூலம் வனவிலங்குகளின் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.

by Editor / 17-12-2022 03:24:38pm
நவீன கேமராக்கள் மூலம்  வனவிலங்குகளின் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.

 வால்பாறையில் வன விலங்கு நவீன கேமரா மூலம் கணக்கெடுக்கும் பணி அறிமுக கூட்டம் அட்டகட்டி மையத்தில் இன்று நடைபெற்றது. ஆனைமலை  வன பாதுகாவலர், கள இயக்குனர்  உத்தரவின் பேரில் வன சரகதிறகு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, மானம்பள்ளி, வால்பாறை , ஆகிய வன பகுதியில் உள்ள வன விலங்குகளின் கணக்கெடுக்கும் பணி 19..12.2022 முதல் 12.01.2023 வரை 25 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நவீன தானியிங்கி கேமரா மூலம் (கேமரா ட்ராப் )  294 grid தானியிங்கி கேமரா மொத்தம் 588 எண்ணம் பொருத்தப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.. இதில் சுமார் 100கும் மேற்பட்டபணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.முதற் கட்டமாக இன்று அட்டகட்டியில் வன மையத்தில் துணை இயக்குனர், களஅதிகாரிகள் கலந்து கொண்டு தானியிங்கி கேமரா மூலம் கணக்கெடுப்பது குறித்து பயிற்சி வகுப்பை துவக்கி வைக்கபட்டன.

 

Tags :

Share via