அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருக்க தகுதியற்றவர் அண்ணாமலை-ராஜன் செல்லப்பா.

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் அவதூறுகளால் தமிழகம் இரண்டு நாட்களாக வெட்கப்பட்டு போய் கிடக்கின்றது. மன அழுத்தம், மற்றும் பதவி பறிபோய் விடும் என அண்ணாமலை இதுபோன்று பேசுகிறார். அவர்கள் குரைப்பதற்காக நாம் திருப்பி குரைக்க கூடாது பதவி போய்விட்டது என கடிப்பதற்காக நாமும் கடிக்கக் கூடாது, அவர் என இல்லாமல் பொதுவாக நான் கட்சியினருக்கு கூறிவருகிறேன்.
போக்கத்தவன் போலீஸ் வேலை என கிராமத்தில் சொல்வார்கள், ஆனால் தற்போது போலீஸ் வேலை நல்ல வேலையாக போய்விட்டது. அண்ணாமலை நாகரீக அரசியலை தமிழகத்தில் கெடுத்துக் கொண்டுள்ளார்.
* அநாகரிகமான பேச்சாளராக அண்ணாமலை உள்ளார். எல்லா நண்பர்களும் சொல்வது போல் ஏர்வாடி அழைத்துச் செல்லும் நிலையில் இருக்கிறாரே தவிர கட்சியை பக்குவமாக அழைத்துச் செல்லும் நபராக அண்ணாமலை இல்லை. இனி அவரை கட்சித் தலைமையாக ஏற்றுக் கொண்டால் அக்கட்சியினர் பல பேருக்கு அசிங்கம்.
வேகமாகவும் உணர்ச்சி வசமாகவும் பேசக்கூடிய சீமான், அண்ணாமலை பேசியது தவறு என சொல்கிறார். அரசியல் பொதுவாழ்வில் இருப்பதற்கு தகுதி இழந்தவர் அண்ணாமலை, அண்ணாமலை அரசியலில் மக்கு. அந்த மக்கு எங்களது தலைவரை விமர்சனம் செய்தால் அரசியலில் இருந்து அவர் அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும்.
* பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு சாதாரண நாடக, நடன நிகழ்ச்சி போல் முடிந்ததே தவிர இறையுணர்வு கொண்ட வெற்றி மாநாடாக நடக்கவில்லை என ராஜன்செல்லப்பா அப்போது தெரிவித்தார்...
Tags : திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா