பங்குச் சந்தை முதலீட்டில் நஷ்டம் மதுரையில் கணவன் மனைவி தற்கொலை
பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுரை மாவட்டத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராகவும் முதலிடாலராகவும் இருந்து வந்த நிலையில்.
பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது ரஷ்ய போர் காரணமாக திடீரென பங்குச் சந்தை சரிவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது 2 குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :