குடும்பத் தலைவி சொல் உண்மை வடிவம் பெறுகிறது-முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு

by Editor / 12-03-2022 02:03:27pm
குடும்பத் தலைவி சொல் உண்மை வடிவம் பெறுகிறது-முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய வீடுகள் இனிமேல் குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.‘குடும்பத் தலைவி’ என பெயரளவில் அழைக்கப்படுவது இதன்மூலம் உண்மை வடிவம் பெறுகிறது.
உலக மகளிர் நாளில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குடும்பப் பெண்களின் தகுதியும், மதிப்பும் சமுதாயத்தில் உயர்வதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.இந்தியாவில் முதன்முதலாக தமிழக அரசுதான் இத்தகைய ஆணையைப் பிறப்பித்திருப்பது பிற மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் விதமாக தமிழக முதல்வர் செயல்படுவது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

 

Tags : The word of the head of the family takes the true form — the fruit of the first. Nedumaran compliment

Share via