CAA - இந்திய அரசுக்கு தாலிபான்கள் அறிவுறுத்தல்

by Staff / 16-03-2024 02:46:11pm
CAA - இந்திய அரசுக்கு தாலிபான்கள் அறிவுறுத்தல்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும் என ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாலிபான் அரசின் அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகத்தில் ஷாகின் கூறுகையில், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories