தமிழ்நாட்டிற்கு ரூ.1,800 கோடி நிறுத்தம் - அமைச்சர்அன்பில்மகேஷ் பொய்யாமொழி

by Editor / 02-07-2025 01:16:09pm
தமிழ்நாட்டிற்கு ரூ.1,800 கோடி நிறுத்தம் - அமைச்சர்அன்பில்மகேஷ் பொய்யாமொழி

புதிய கல்விக்கொள்கையில் இணைந்தால்தான் இந்த ஆண்டு நிதியையும் விடுவிப்போம் என மத்திய அரசு கூறியதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ரூ.2,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், நடப்பு (2025 - 2026) கல்வி ஆண்டிற்கான கல்வி நிதி ரூ.1,800 கோடியையும் மத்திய அரசு நிறுத்தியதாக தெரிவித்த அமைச்சர், மாநில கல்விக்கொள்கை சார்ந்த அறிவிப்பு இம்மாதத்தில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via