பாஜகவில் இருந்து பிரபல நடிகை நீக்கம்

by Staff / 22-11-2022 01:18:56pm
பாஜகவில் இருந்து பிரபல நடிகை நீக்கம்

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo