கழுதை இறைச்சி விற்ற 5 பேர் கைது

by Staff / 09-04-2024 12:36:19pm
கழுதை இறைச்சி விற்ற 5 பேர் கைது

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பீட்டா அமைப்பினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விஜயவாடா முக்கிய பகுதியில் கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த 30 கிலோ கழுதை இறைச்சியை பறிமுதல் செய்த காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo