காவல் நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல்..

சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், அதே போல மற்றுமொரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் விசாரணை கைதி மீது போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மது போதையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவரை போலீசார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :