வருமானவரித்துறையை வைத்து மிரட்டும் பாஜக -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 01-11-2023 12:59:10pm
வருமானவரித்துறையை வைத்து மிரட்டும் பாஜக -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

. இன்று சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசியமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நெருக்கடி காலகட்டத்தில் ஆட்சியைவிட ஜனநாயகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர் கலைஞர். ஆனால், இன்று ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலை தான் நிலவுகிறது. .என்ன செய்தாலும் பாஜக தோல்வியை தழுவுவதை தவிர்க்க முடியாது.. தனக்கு எதிராக யார் எந்த கருத்து சொன்னாலும் அவர்களை அச்சுறுத்துவது, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை வைத்து மிரட்டுவது போன்ற செயல்களை பாஜக செய்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்..

 

Tags :

Share via