போதைப்பொருள் கடத்தல் நைஜீரியாவை சேர்ந்தவருக்கு சிறை

by Staff / 01-11-2023 01:12:59pm
போதைப்பொருள் கடத்தல் நைஜீரியாவை சேர்ந்தவருக்கு சிறை

கத்தாருக்கு தபால் மூலம் மெத்தாபெட்டமைன் என்கிற போதைப்பொருளை கடத்திய வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அஞ்சலக பார்சல் மூலமாக வெளிநாட்டிற்கு போதைப்பொருக் கடத்தப்படுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னை மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மேடவாக்கம் அஞ்சல் அலுவலகத்தில் சோதனையிட்டனர். அப்போது, கத்தார் தலைநகர் தோகாவிற்கு 194 கிராம் அளவிற்கு மெத்தாபெட்டமைன் பார்சல் மூலம் அனுப்பப்படுவது, கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதை மேடவாக்கத்தில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த 38 வயதான கிளென் தாமஸ் அனுப்பியதை கண்டறிந்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுசம்பந்தமான வழக்கு போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போதைப் பொருள் கடத்தியதாக கிளென் தாமசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

Tags :

Share via