பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன்-கட்சியை விட்டு நீக்கிய பாஜக

by Editor / 14-08-2022 09:36:50am
  பாஜகவில் இருந்து விலகிய  டாக்டர் சரவணன்-கட்சியை விட்டு நீக்கிய பாஜக

ராணுவ வீரர் லெட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் புதுப்பட்டி கிராமத்தில் அஞ்சலி செலுத்தவந்த தமிழக அமைச்சர்  பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன்கார் மீது செருப்பு வீசிய விவகாரம் : 
பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் தன்னை பாஜகவில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அமைச்சர் .பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவரது இல்லத்தில் சந்தித்த பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்றும் காலையில் நிகழந்த சம்பவம் மன அமைதியை கெடுத்துவிட்டது, மன அமைதி வேண்டி தற்பொழுது நிதி அமைச்சரை சந்தித்து நேரில் வருத்தமும் மன்னிப்பும் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் அவரை பாஜக தலைமை  இன்று மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கம் செய்து பாஜக மாநில தலைமை அறிவிப்புவெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via