நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் 21 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் 21 பேர் டெல்லி வழியாக நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். அண்மையில் நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வெளியுறவுத்துறை இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன. முயற்சியின் பயனாக காத்மண்டு மற்றும் பிற பகுதிகளில் தவித்த தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது தேவையான உணவு தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன .தமிழக அரசு சார்பாக மீட்புப் பணிகளில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்திலிருந்து பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத்,தென்னரசு ஆகியோர்டெல்லியில் உள்ளனர்.மற்ற தமிழர்கள் பற்றி அரசு தகவல்களை பெற முயற்சி மேற்காெண்டு வருகிறது.
Tags :



















