அத்வானிக்கு சசிகலா வாழ்த்து

by Staff / 04-02-2024 01:09:24pm
அத்வானிக்கு சசிகலா வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், '2015ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஜெயலலிதா மீது அத்வானி மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo