விசிக, கொ.ம.தே.க. உடன் பிப்.12ஆம் தேதி பேச்சுவார்த்தை

by Staff / 04-02-2024 01:19:39pm
விசிக, கொ.ம.தே.க. உடன் பிப்.12ஆம் தேதி பேச்சுவார்த்தை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் வரும் 12ஆம் தேதி திமுக நாடாளுமன்ற தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும் 12ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இதில், கூடுதல் தொகுதிகளை கேட்டு சிபிஐ, சிபிஎம், மதிமுக கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கொ.ம.தே.க., விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என திமுக குழு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via