வெளிநாட்டுவாகனங்களுக்கு இந்தியாவில் கட்டுபாடுகள் விதிப்பு

by Editor / 06-09-2022 01:20:39pm
வெளிநாட்டுவாகனங்களுக்கு இந்தியாவில் கட்டுபாடுகள் விதிப்பு

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள், இந்தியாவில் பயணிகளை ஏற்றிச்செல்லவோ, சரக்குகளை ஏற்றிச்செல்லவோ அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். உரிய ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, உரிய காப்பீட்டு பாலிசி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவற்றை இந்த வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் ஆங்கிலத்தை தவிர வேறு மொழியில் இருந்தால், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories