கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது - வங்கி முகவர்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

by Editor / 14-08-2022 09:39:35am
கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது - வங்கி முகவர்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

மும்பை: வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. இவர்கள், கடன் பெற்றவர்களை மனரீதியாக துன்புறுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, கடன் வசூல் முகவர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானம் அல்லது இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை. மேலும், கடன் வசூல் தொடர்பாக வாடிக்கையாளரை காலை 8 மணிக்கு முன்போ அல்லது இரவு 7 மணிக்கு பின்போ அழைத்து பேசக்கூடாது. மேலும், கடனாளரின் குடும்பத்தார், நண்பர்களிடம் அத்துமீறி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் முகவர்கள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via