3.50 லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கைது:

by Editor / 09-05-2022 10:57:22pm
 3.50 லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கைது:

சேலம் மாவட்டம், ஆத்தூர், ராணிப்பேட்டையில் பயணியர் மாளிகை வளாகத்தில்  நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.உதவி கோட்ட பொறியாளராக சந்திரசேகரன் பணியாற்றி வருகின்றார். தெடாவூர் முதல் தம்மம்பட்டி வரையிலான சாலை விரிவாக்கப் பணிக்காக 6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டது. இதையடுத்து வீரகனூர் தென்கரையைச் சேர்ந்தஒப்பந்ததாரர் சுந்தர்ராஜ் என்பவரிடம் ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் தனக்கு சாலை விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தம் கிடைக்க திட்ட மதிப்பில் 12% ( 78லட்சத்து 53 ஆயிரம்) லஞ்சமாக வழங்க வேண்டும். பணி முடிந்த பின் தொகை வழங்க வேண்டும். முன்னதாக 0.5% (3 லட்சம் 50 ஆயிரம்)வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து சுந்தர்ராஜ் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். 

அதனடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையில்போலீசார் சுந்தரராஜன் ரசாயன பவுடர் தடவிய 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொடுத்தனுப்பினார். உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்த சந்திரசேகரனிடம் சுந்தர்ராஜ் கொடுத்தபொழுது மறைந்திருந்த போலீசார் சந்திரசேகரனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து சந்திரசேகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Highways Assistant Divisional Engineer arrested for accepting Rs 3.50 lakh bribe:

Share via