தேர்வு பயத்தால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த குன்றத்தூரில், தேர்வு பயத்தில் திவ்யதர்ஷினி என்ற அரசுப் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நாளை (ஏப்.11) 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வு எழுதவிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டுள்ளனர். மேலும், மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :