பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு - 52 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 52பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செப்.29) பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மஸ்தாங் பகுதியில் மசூதி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஈத் மிலாதுன் நபியை முன்னிட்டு மக்கள் மசூதிக்கு அருகில் கூடியிருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Tags :