ரயில்வே நடைமேடையில் பட்டா கத்திகளை உரசியபடி பயணிக்கும் மாணவர்கள் பதைபதைக்கும் பயணிகள்

சென்னை மின்சாரரயில்களில் பல்வேறு கல்லூரிமாணவர்கள் பயணித்துவருகின்றனர்.இதில் குறும்புக்கார மாணவர்கள்,வீரத்தை காட்டும் மாணவர்கள் என பல்வேறுதரப்பு மாணவர்கள் பயணித்து வரு கின்றனர்.இணையத்தள மோகத்தால் மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர், புறநகர் மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி முதல் கத்திவாக்கம் வரை பயணம் மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் படிகட்டில் நின்றுகொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியப்படி ஆபத்தான முறையில் பயணம் சென்றனர்.
தினமும் காலைவேளைகளில் அரசு,தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஏராளமானவ்ர்கள் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கும், வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கும் மாணவர்களின் இந்த ஆபத்தான செயல் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரயில்வே காவல்துறையினர் பார்த்தும் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக ரயிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் சில மாணவர்கள் அத்துமீறி மோதலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :