வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை

by Admin / 09-10-2022 10:48:39am
வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பால்தாக்கரேவால் தொடங்கப்பெற்று பெரும் மக்களின் ஆதரவைப்பெற்ற இயக்கம்
சிவசேனா.இக்கட்சி பால் தாக்கரேவிற்குப் பிறகு அவரது மகன் உத்தம் தாக்காரே கடந்த தேர்தலில் போட்டியிட்டு
கூட்டணி  கட்சிகளின்  துணையுடன் ஆட்சி அமைத்திருந்தது

.கட்சிக்குள் தோன்றிய அதிகாரப்போட்டியில் சிவசேனாஉடைந்து ஆட்சியை இழந்தது .கட்சியிலிருந்து பிரிந்த ஷிண்டே முதல்வராக பி.ஜே.பி துணை உடன் ஆட்சி அமைத்தா ர் .இந்நிலையில் ,இடைத்தேர்தலில்  போட்டியிட இரண்டு அணியினரும்  ஒரே சின்னத்தை  கோரியதால் தேர்தல்    ஆணையத்திடம்  பிரச்சனை சென்றது

.இந்நிலையில், கிழக்கு அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இரு அணிகளும்  வில் அம்பு சின்னத்தை  கோரியதால்,இருதரப்பும் வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்ததோடு இரு அணிகளும்வெவ்வேறு சின்னத்தை தேர்ந்தெடுக்கவும் கட்சியின் பெயரைத்தேர்ந்தெடுத்து வரும் 10ஆம் தேதிக்குள் மத்திய தேர்தல்ஆணையத்திடம் வழங்க அறிவுறுத்தியுள்ளது.இதனால், சிவசேனாவின் வலிமைமிக்க சின்னம் கோஷ்டி சண்டையால்முடக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

 

Tags :

Share via