திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக கூறி 49 பேர் கைது.220 லிட்டர் சாராயம் பறிமுதல்

by Editor / 28-05-2023 10:30:43am
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக கூறி 49 பேர் கைது.220 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து தமிழக டிஜிபி உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்களை தீவிரமாக கைது செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு பகுதிகளில் சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் நேற்று சாராய வழக்கில் கைதானவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் மற்றும் 390 வெளிமாநில மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த 15 நாட்களில் 6000 லிட்டர் சாராயம் மற்றும் 900 வெளி மாநில மது பாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via