புதுவையில் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

by Staff / 31-03-2024 02:27:38pm
புதுவையில் சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

புதுவை மரப்பாலம் வசந்த் நகர் பகுதியில் பொலிவுறு நகரத் திட்டம் சார்பில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அந்த பணியில் 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டு பழமையான சுற்றுச் சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வாய்க்கால் அமைக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories