எஸ்ஐ என ஏமாற்றி தோழி வீட்டில் திருடிய பெண் கைது

தூத்துக்குடியைச்சேர்ந்தவர் இளம்பெண் கங்கா தேவி. இவர் தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் கங்கா தேவி தான் சென்னையில் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இதை அவரது தோழிகளும் நம்பியுள்ளனர்.சம்பவதினத்தன்று ஒரு தோழி வீட்டில் அவரை சந்திக்க சென்ற கங்காதேவி அங்கிருந்து தாலி, செல்போன், பணம் போன்றவற்றை திருடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த தோழி தாளமுத்து நகர் காவல் துறையினரிடம் கங்கா தேவி மீது புகார் அளித்தார்.அதன் பேரில் நடவடிக்கை எடுத்த காவலர்கள் தலைமறைவாக இருந்த கங்கா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கங்கா தேவி காவல்துறையை சார்ந்தவர் அல்ல என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :