கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக பாதுகாக்க தவறியதால் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அரசின் மெத்தன போக்கை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேளாண்துறை அதிகாரிகளை அனுப்பி பாதிப்புகளை மதிப்பிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என காரணம் கூறாமல் உடனடியாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும், மறு சாகுபடி செலவாக 12 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுதர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :