அதிராம்பட்டினம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்...

by Staff / 21-10-2024 12:59:19pm
அதிராம்பட்டினம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்...

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்குளம் நசுவினி ஆற்றில் காலையில் அப்பகுதி மக்கள் குளிக்கச் சென்றபோது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஆற்றில் மிதந்து வந்தது. இது குறித்து அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் இறங்கி உடலை எடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் அதிராம்பட்டினம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆற்றில் இறங்கி உடலை கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த நபர் யார் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசினரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via