வலிமை ரிலீஸ் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

by Admin / 03-03-2022 05:26:55pm
வலிமை ரிலீஸ் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

கோவையில் நடிகர் அஜித்குமாரின் வலிமை படம் ரிலீஸ் ஆனது அன்று தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைதான இளைஞர் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியான நிலையில் கங்கா திரையரங்கில் அதிகாலையில் சிறப்புக் காட்சிக்காக ஏராளமானோர் திரண்டனர்.

அச்சமயம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் அங்கிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்த தோடு ராமச்சந்திரன் என்பவர்  லேசான காயமடைந்தார்.

இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நெல்லையைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் அதிக விலைக்கு விற்று வந்ததாகவும் டிக்கெட் வாங்க முடியாத ஆத்திரத்தில் யாருமே படம் பார்க்க கூடாது என நினைத்து நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்  

 

Tags :

Share via