1முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. தமிழக அரசு

by Editor / 13-10-2021 10:17:23am
1முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. தமிழக அரசு

தமிழக அரசு படிக்க மற்றும் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், சீருடை, பை மற்றும் உதவித்தொகை ஆகிய பல்வேறு திட்டங்கள் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு 2021- 2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை மற்றும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மாணவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் தொழில் கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி ஆகியவை படிக்கும் மாணவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்க தேசிய கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பம் பள்ளிப்படிப்பு கல்வி தொகை திட்டத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை மற்றும் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி விவரங்களை அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via