4ஆம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

கொச்சி அருகே பைமடம் 6வது வார்டு புத்தன்புரக்கல்லை சேர்ந்தவர் பி.கே.அஜயன். இவரது மகன் அபிஜித் (10). பைமடம் அரசுப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து இறந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு வேறு எந்த வித உடல்நலக் குறைபாடும் இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வியாழக்கிழமை இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :