சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு.

by Editor / 01-12-2023 08:49:53am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு.

வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயல்  சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழையும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை வெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு.

Share via