பிரம்மாண்டமான கோலத்தை பார்க்க குவிந்துவரும் மக்கள் கூட்டம்

by Editor / 30-08-2022 09:30:11pm
பிரம்மாண்டமான கோலத்தை பார்க்க குவிந்துவரும் மக்கள் கூட்டம்

கேரளமாநிலத்தில் புகழ் பெற்ற பண்டிகைகளில் முக்கியமானது  ஓணம் பண்டிகை.இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் பல்வேறு போட்டிகள் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.மலர்களை நேசித்து ,காய்கறிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விழாவாக ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஓணம் பண்டிகை விழா தொடங்கியுள்ளதனை மெய்பிக்கும் வண்ணம்  கேரள மாநிலம்  திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான கோலம் போடப்பட்டுள்ளது. 60 அடி விட்டத்தில் சுமார் 1500 வகையான பூக்களால் இந்த பூக்கோலம் போடப்பட்டுள்ளது.பூக்களால் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான கோலத்தை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர்.கோலாகலமாக தொடங்கியுள்ள ஓணம் பண்டிகை செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று திருவோணமாக கொண்டாடப்பட இருக்கிறது.


 

 

Tags :

Share via