மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறுகிறது.

by Editor / 12-08-2022 09:33:34am
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறுகிறது.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வினாத்தாள் மொழி மாறிவந்த விவகாரம்.தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மீண்டும் தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை. 

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் 17 நகரங்களில் நடைபெற்ற இளநிலை பாடப்பிரிவிற்கான நுழைவு தேர்வில்  தமிழ் மொழியில் வினாத்தாள் தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் வினாத்தாள் வந்தது.மேலும் சில பாடப்பிரிவுகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதன் காரணமாக தேசிய தேர்வு முகமை அவர்களுக்கு ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் சுதந்திர தினம் விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் இந்த தேர்வினை மீண்டும் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறும் என தேதியை மாற்றி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

Tags : The Central University Entrance Exam will be held from August 24 to 28.

Share via