பிப்.19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பிப்.19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.20ம் தேதி 2024-2025 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என அப்பாவு அறிவித்தார்.
Tags :